171
பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்மஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி மூவரைக் கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்விவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. செரிப் செகாட் எனும் நபரே இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் சிறைகளில் இருந்துள்ள குறித்த நபர், சிறையில் இருந்தபோது தீவிர இஸ்லாமியவாதியாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படும் இடத்தினை சுற்றவளைத்து தேடுதல் நடத்திய போது அவர் தப்பிக்க முயன்ற போது காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love