இலங்கை பிரதான செய்திகள்

தீவுகளுக்கான படகுசேவைகளுக்கான தகுதி சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை ,


தீவுகளுக்கான பயணிகள் படகுசேவைகளில் ஈடுபடும் படகுகளின் தரம் மற்றும் கடல்போக்குவரத்துக்கான தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார்.

எழுவைதீவு , அனலை தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த எழுதாரகை படகின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக ஆராயும் விசேட கூட்டம் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன் குறித்த எழுதாரகை படகினை பராமரிப்பு செய்வதற்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை அதற்காக பல இலட்சம் ரூபாவினை வருமானத்திற்கு மீறி செலவு செய்கின்றோம். அதனால் அதன் சேவையினை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இயலாமை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழி ஒன்றினை ஏற்படுத்தவேண்டும் என ஆளுநரிடம் தெரிவித்தார்.

நெடுந்தாரகை வடதாரகை சேவையில் ஈடுபடுத்துவதைப்போன்று எழுதாரகையினையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சேவையில் ஈடுபடுத்த முடியும் அல்லது ஊர்காவற்றுறை பிரதேசபையிடம் கையளித்து மாகாணசபையின் வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதியினை ஒதுக்கீடு செய்து சேவையில் ஈடுபடுத்த முடியும் அதுவும் கைகூடாது போனால் தனியார் நிறுவனங்கள் ஊடாக இச்சேவையினை செய்ய முடியும் என ஆலோசிக்கப்பட்டது.

இவைகள் அனைத்தினையும் செவி மடுத்த ஆளுநர் தீவகத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளின் எண்ணிக்கை கட்டணம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் அவற்றில் சட்டரீதியாக காப்புறுதி செலுத்தப்பட்டு அனுமதியுடன் சேவையில் ஈடுபடும் படகுகளின் விபரங்களையும் கட்டணங்களையும் விபரமாக தெரிவிக்குமாறு பணித்துள்ளார்.

தீவகத்தில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு படகு சேவையினை உத்தரவாதத்துடன் நடாத்துவதற்;கு படகுகளில் பயணிகளுக்கான வசதிகள் பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகள் படகின் தரம் பதிவு காப்புறுதி உள்ளிட்டவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.