Home இலங்கைமகிந்த ராஜபக்ஸ தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராகின்றார்

மகிந்த ராஜபக்ஸ தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராகின்றார்

by admin


தமிழ்தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் இழுக்க முயன்ற மகிந்த ராஜபக்ஸ இந்த பழம் புளிக்கும் கதையை சொல்கின்றார்

மகிந்த ராஜபக்ஸ தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராகுவது புலப்படுகின்றது என மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

மகிந்த ராஜபக்ஸ தனது அறிக்கையில் 103 ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ள ஐக்கியதேசிய கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து பணயக்கைதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை இயக்கும் கருவி தமிழ் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சொல்வதை ஐக்கியதேசிய கட்சி செவிமடுத்திருக்காவிட்டால் ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்திருக்கும் ; எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கதில் கருத்தொன்றை பதிவு செய்துள்ள சுனந்த தேசப்பிரிய தமிழ்தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் இழுக்க முயன்ற மகிந்த ராஜபக்ஸ இந்த பழம் புளிக்கும் கதையை சொல்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவின் இந்த அறிக்கையானது தமிழ் எதிர்ப்பு இனவாதத்தை கொண்டிருக்கின்றது எனவும் பதிவு செய்துள்ள சுனந்த தேசப்பிரிய மகிந்த ராஜபக்ஸ தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More