ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ககை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளமை அரசியல் நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதியை பாரிய நெருக்கடிக்கு தள்ளியே ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் அதிகாரத்தை பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் உயர் நீதிமன்றம் அரசியல் நெருக்கடியினை தணிப்பதை விடுத்து தீவிரப்படுத்தியுள்ளது எனவும் தற்போது ஜனாதிபதி, பிரதமரிடம் அதிகாரங்கள் எவ்வாறு பொறுப்பாக்கப்பட வேண்டும் என்னும் அதிகார போட்டி இடம் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏவ்வாறெனினும் தாங்கள் ஜனாதிபதியுடனே தொடர்ந்து செயற்படுவோம் எனவும் பங்காளி கட்சிகளாக மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயற்பட்டமையின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி தனது விருப்பத்தின் பெயரில் அரசாங்கத்தை நிர்வகித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.