Home இலங்கைபுதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறுமா?

புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறுமா?

by admin

ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் 30 பேர் மட்டுமே அங்கம் வகிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான இந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளார்கள் என்றும் எவ்வாறாயினும், இரண்டு தரப்பினருக்குமிடையில் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வரவு- செலவுத் திட்டத்துக்கு பதிலாக அடுத்த இரண்டு மாதத்துக்கான கணக்கறிக்கையும் எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதில் அரச பணியாளர்களின் சம்பள விவகாரம், அவசர கொடுப்பனவுகள், அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை சலுகைகள், மானியங்கள், வெளிநாட்டுக் கடனை மீள செலுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More