Home இலங்கைஈச்சளவக்கை கிராம மீனவர்களை தொடர்ந்தும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட அனுமதி

ஈச்சளவக்கை கிராம மீனவர்களை தொடர்ந்தும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட அனுமதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட காயாநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை கிராமத்தை சேர்ந்த நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்களுக்கு தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈச்சளவாக்கை கிராம பகுதியில் நண்னீர் மீன் பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் யுத்த காலப்பகுதியின் போது இடம் பெயர்வுகளை சந்தித்து யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் குறித்த கிராமத்தில் குடியமர்ந்த பின்னர் அவர்களுக்கு மீண்டும் நன்னீர் மீன்பிடிக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமக்குரிய நீதியை பெற்றுத் தரக் கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன் இலங்கை மனித உரிமை ஆணைகுழுவிடம் முறைபாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசரணைகள் மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் சிபாரிசின் படி இன்றைய தினம் (20) பாதிக்கப்பட்டவர்களுக்கான மீனவர்களுக்கான மீன்பிடி அனுமதியானது நீரியல் வள தினைகளத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதியில் இருந்து எந்த வித தடையும் இன்றி மீன் பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More