200
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் திடீர் நோய்வாய்ப்பட்டதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இன்று அவர் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும், இதன் பின்னர் அவரை பொரல்லையில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love