உத்தரபிரதேசம் மாநிலத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த முடியாது எனவும் அரசியலமைப்பு சட்டத்தின்படி தரமான மது விற்கப்படும் எனவும் சட்டசபையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்
உத்தரபிரதேசம் மாநில சட்டசபையில் நேற்றையதினம் கேள்வி நேரத்தின்போது மதுவிலக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஆயத்தீர்வை துறை அமைச்சர் ஜெய் பிரகாஷ் சிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு என்பது இந்த மாநில அரசின் கொள்கை. ஆனால், மாநில அரசின் வருமானத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள், பியர் அல்லது நாட்டு மது வகைகளின் விற்பனையை தடை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. மேலும் மது விற்பனையை தடை செய்து மதுவிலக்கை அமுல்படுத்தினால் கள்ளமாக Nமுற்கொள்ளப்படும் மது விற்பனை பெருகிவிடும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, வாடிக்கையாளர்களுக்கு தரமான மதுவை விற்பதில் மாநில அரசு அக்கறை செலுத்தும் என அமைச்சர் ஜெய் பிரகாஷ் சிங் குறிப்பிட்டுள்ளார்.