இந்தியா பிரதான செய்திகள்

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்:

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று காலமானார்.புதுச்சேரியில் 1945-ம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன் பத்திரிகைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கினார். வானம் வசப்படும் என்ற வரலாற்று புதினத்துக்கு இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், கடந்த ஓராண்டாக புற்றுநோயால் கடும் பாதிக்கப்பட்டிருந்த  அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில்    சற்று உடல்நலம் தேறி பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.