இலங்கை பிரதான செய்திகள்

மன்னாரில் முழுமையடையாத வீதி தொடர்பில் மக்கள் விசனம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மூர்வீதி,காட்டுபள்ளி பிரதான வீதி கணணி நிலைய வீதியில் உள்ளக வீதியின் நிர்மானப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் குறித்த வீதி உரிய முறையில் மேற்கொள்ளாது முழுமை பெறவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதி அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த தாரர் உரிய முறையில் பணிகளை முன்னெடுக்கவிலையென மக்கள் தெரிவித்துள்ளனர் . அதே போல் மன்னாரில் உள்ள பொறியியலாளர் குழு குறித்த பணி ஒழுங்கான முறையில் நடைபெறவில்லை என்பதை சென்று பார்த்து தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

வீதியில் உள்ள தொலைபேசி இணைப்பு கம்பத்தையும் அப்படியே வைத்தும் வீதி உரிய முறையில் மட்டம் பார்க்காமலும் குறித்த வீதி அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றது. ஏற்கனவே நீர் தேங்கியிருந்த பகுதியில் காணப்பட்ட களிமண் அகற்றப்படாமலும், வீதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்த வீதி பணிகள் உரிய அதிகாரிகள் உரிய முறையில் மேற்பார்வை செய்யப்பட்டு தரமான வீதியை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.