வடமராசட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்தமை காரணமாக தொண்டைமானாறு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இப் பகுதியில் ஊடாக பயணிக்கும் மாணவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அப் பகுதிக்கு அறிவித்தல் விடுக்கும் வரையில் செல்லுவதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை அறிவிறுத்தியுள்ளார்.
நீர்மட்டம் 3.8 அளவில் உயர்வடைந்தமை காரணமாக வடமராட்சி நன்னீரேரி மற்றும் தொண்டமனாறு கடலேரி உட்பட அக்கறை பகுதி கடலேரிகளின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
நாக்கு அடி அளவில் நீரை கொள்ள நிர்ணயிக்கப்பட்டுள்ளமையால் அப் பகுதிகளில் குளிப்பவர்களை அதனை தவிர்க்க வேண்டும் என்றும் வீதியினால் பயணிப்பவர்கள் அவதானமாக பயணம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.