முத்தலாக் சட்ட மசோதா கடந்த செப்டம்பர் மாதம் அவசர சட்டமாக இயற்றப்பட்ட நிலையில் அதற்கு பாராளுமன்றில் ஒப்புதல் பெறுவதற்காக நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இங்கு நிறைவேற்றப்பட்ட பின்னர் மாநிலங்களவையில் இந்த புதிய மசோதா அங்கு நிறை வேறுமா என்ற கேள்வி எழுந்துள் ளது.
பாஜக கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும் பான்மை இல்லை என்பதால் அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளத்தின் ஆதரவு தேவை. இதில் அதிமுக இந்த முறையும் முத்தலாக் மசோதாவை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளது.
ஷரீயத் சட்டத்தில் அரசு தலையிடக் கூடாது என்பதால் இந்த மசோதாவையும் எதிர்ப்போம் எனத் தெரிவித்துள்ள அதிமுக சிறுபான்மை யினர் பிரிவு தலைவரும் மக்க ளவை உறுப்பினருமான அன்வர் ராசா கைதாகும் கணவருக்கு பிணை என்பதை தவிர பெரிய மாற்றம் எதுவும் இதில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்;
எனவே, மசோதா வாக்கெடுப் பின்போது அதிமுக, அவையில் இருந்து வெளியேறினால் அது மறைமுக ஆதரவாக அமைந்து விடும் எனவும் ;. இதே நிலைப்பாட்டை பிஜு ஜனதா தளமும் எடுத்தால் முத்த லாக் மசோதா நிறைவேற்றப்பட்டு விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது