பம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொரிவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டி காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசாரணைகளை நடத்திய காவற்துறையினர், பூட்டியிருந்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, சில நாள்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தவரின் சடலத்தை நேற்றுக்காலை 10:30க்கு மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர், 65 வயதான சதாசிவம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த காவற்துறையினர் , பிரேத பரிசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியில், சதாசிவம் சடலமாக மீட்கப்பட்டார்…
158
Spread the love