Home இலங்கைவெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்…

வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்…

by admin


கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தினால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் கிளிநொச்சியில் உள்ள படையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்அந்த வகையில் இன்று(27) படையினரும், கடற்படையினரும் இணைந்து இப் பணியைமுன்னெடுத்தனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வெள்ள நீர் கலந்த மக்கள் பாவணை கிணறுகளை துப்பரவு செய்யம் பணிகளில் காலை முதல் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய முப்படையினரும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பல்வேறு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More