பிலிப்பைன்சின் தெற்குப் பகுதியில் நேற்றையதினம் ஏற்பட்ட 6.9 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பைகால் பகுதியில் 16 பேரும், கிழக்கு விசாயாஸ் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.