244
உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று (01.01.2018) திங்கட்கிழமை சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
இன்று காலை 09.30 மணியளவில் யாழ் சின்மயாமிஷன் சுவாமிகள் ஆச்சிரமத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் தலமையிலான குழுவினர் சுவாமிகளைச் சந்தித்தனர். அதன்போது அவர்களுடன் கலந்துரையாடிய சுவாமிகள் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். அதனையடுத்து நல்லை ஆதீன குருமுதல்வரைச் சந்தித்த தமிழ்த் தேசிய பேரவையினர் நல்லைஆதீனக் குருமுதல்வரிடமும் ஆசீர்வாதம் பெற்றனர். இதனையடுத்து நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட தமிழ்த் தேசியப் பேரவையினர் நல்லுர் தேரடியில் தவத்திரு யோகர் சுவாமிகளின் தியானத்தில் ஈடுபட்ட இடத்திலும் வழிபாட்டில் இடுபட்டனர்.
இதேவேளை நேற்றையதினம் தமிழ்த் தேசியப் பேரவையினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளார் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருந்தனர்.
Spread the love