குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குற்றச் செயல் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1400 பக்கங்களைக் கொண்ட அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 70 பேர் இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment