Home சினிமா என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியுள்ளீர்கள்

என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியுள்ளீர்கள்

by admin


‘என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும். நீங்கள் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவளாக்கி இருக்கிறீர்கள். உங்கள் அன்பு என் வாழ்க்கையை அழகாக்கியுள்ளது என நடிகை நயன்தாரா தன் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தியின் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2018 புத்தாண்டுக்காக அவர் எழுதிய வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுத்து வருகிறேன் எனவும் மற்றதை கடவுளிடம் விட்டுவிட்டேன் எனவும் உங்கள் அன்பால் நான் பொழுதுபோக்கான படங்கள் மட்டுமல்லாது ‘அறம்’ மாதிரியான நல்ல படங்களையும் கொடுக்க முடிந்தது எனவும் அவர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த நாளில் சினிமா பிரபலங்கள், ஊடகங்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்லிய அவர் இந்த வருடம் மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்பால் தான் நான் சினிமாவில் இருக்கிறேன். உங்கள் இதயத்தில் எனக்கும் சிறு இடம் கொடுத்ததற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More