மன்செஸ்டர் யுனைடெட் வீரர் அஷ்லி யங்கிற்கு மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் மன்செஸ்டர் யுனைடெட் மற்றும் சவுத்தாம்ப்டன் அணிகளுக்கிடையிலான போட்டி கோல்கள் எதுவும் இருதரப்பும் போடாதமையினால் சமனிலையில் முடிவடைந்திருந்தது.
இந்த போட்டியின்போது மன்செஸ்டர் வீரர் யங் சவுத்தாம்ப்டன் வீரர் டஸ்கன் டாடிக்-ஐ தாக்கிதாக தெரிவித்து கால்பந்து சங்கத்தின் ஒழுங்குமுறை ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது யங் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனையடுத்து கால்பந்து சங்கம் அவருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. இதனால் யங் இன்று எவர்டென் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.