குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சவூதி அரேபியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்வதற்காக அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிட்ட சிவில் செயற்பாட்டாளர்களை சவூதி அரசாங்கம் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதகுருக்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இதுவரையில் சவூதி அரேபியா எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.