ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் இல்லை என இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் பிரச்சினை உள்ள போல வடகிழக்கு இந்திய மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் பிரச்சினை உள்ளது. அவர்களின் தாக்குதலால் பல இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். மாவோயிஸ்ட்களின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்களின்படியே அரசு நடந்து வருகிறது.
எனினும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளர்h. ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.