Home சினிமாவிசுவாசத்தில் யுவன் இல்லையா ?

விசுவாசத்தில் யுவன் இல்லையா ?

by admin


நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் சங்கர் ராஜா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள விவேகம் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வழக்கமான கூட்டணியை மாற்ற இயக்குனர் சிவா முடிவு செய்து அனிருத்துக்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இயக்குநர் சிவா – யுவன் சங்கர் ராஜா இருவருமே பாடல்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே , இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் சங்கர் ராஜா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் சிவா – அஜித் கூட்டணியில் பணிபுரிந்து வரும் அனிருத் மீண்டும் இசையமைப்பாளராக வாய்ப்பிருப்பதாக திரையுலகினர் தெரிவிக்கின்றார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More