குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களை காரைநகர் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு விசை பாடுகளையும் மீட்டு உள்ளனர். தமிழகம் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து கச்சதீவு பகுதியில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டு இருந்த வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படை முகாமில் தங்க வைத்த பின்னர் இன்று வியாழக்கிழமை மதியம் யாழ்.நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களை கடற்படையினர் கையளித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது.
Jan 4, 2018 @ 03:26
ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் இன்றையதினம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு அருகே நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தியதாகவும் இதனால் மீனவர்கள் கரை திரும்ப முற்பட்டவேளை 13 மீனவர்களை 2 படகுகளுடன் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளனது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.