Home இலங்கைஇலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தம் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் – ஹரி ஆனந்தசங்கரி

இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தம் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் – ஹரி ஆனந்தசங்கரி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்காக வருகை தந்து அவர்களுடன் உரையாடிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கை அரசாங்கத்திலும், சர்வதேசத்திலும் நம்பிகையிழந்தே காணப்படுகின்றனர் எனவும் கனடா , இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 321 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற் இடத்திற்குச் சென்று காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த ஹரி ஆனந்தசங்கரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக தான் இன்று இங்கு வந்ததாகவும், கடந்த தடவை வந்த போது இருந்த அதேநிலைமை இன்றும் தொடர்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் ஜநா மனித உரிமைகள் பேரவையிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் .மேலும் இலங்கை பிர்ச்சினை தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்கும் எனவும் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More