Home இந்தியா காஷ்மீரில் 100 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து – 6 பேர் பலி…

காஷ்மீரில் 100 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து – 6 பேர் பலி…

by admin

காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டத்தில் இன்று 100 அடி பள்ளத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுபயணிகளுடன் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்தானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்து இந்த விபத்து எற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து குறித்த பகுதிக்கு சென்ற மீட்புப் பணியினர் 17 பேரை மீட்டுள்ளதுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேரின் உடல்களையும் எடுத்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More