யாழ்ப்பாணத்துக்கு, இன்று காலை சென்ற பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தமையை சுட்டிக்காட்டிய பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் முதலமைச்சரை சந்திப்பது தேவையற்றது என தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் ஜெயவர்த்தன, திருமதி மைக்கெலி டொலினி, கிரிஸ் கிறீன் திருமதி கெல்லி டொல்கேட்ஸ் மற்றும் டான் கார்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ள பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் யாழ் பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment
தங்கள் தேவைக்காக யாழ்ப்பாணத்துக்கு சென்ற பிரித்தானிய அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்க மறுப்பதினால் கூடிய சுய பயனை அடையமுடியும் என்று நினைக்கின்றார்கள். இத்துடன் முதலமைச்சரையும் ஊக்கம் இழக்க வைக்கலாம் என்றும் சிந்திக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு பயனற்ற இவர்களை விக்னேஸ்வரன் சந்திப்பது விக்னேஸ்வரனின் நேரத்தை விரயமாக்குவது போன்றது.