Home இலங்கைமதவழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை :

மதவழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத வழிபாட்டுத் தளங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமன்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு இடமளிக்கும் மதவழிபாட்டுத் தள பொறுப்பாளர்களுக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகங்களைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் சுவரொட்டிகள் பதாகைகளை காட்சிப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தகுதியற்ற வேட்பாளர்களை இனம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் அவ்வாறான மூன்று வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More