உலகம்

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரம் பேர் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 90 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில் குறைந்தபட்சம் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் பல நகரங்களில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இளைஞர் யுவதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply