குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வியட்னாமின் அரச எண்ணெய் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வியட்னாமின் எண்ணெய் நிறுவனத்தில் கடமையாற்றிய சிரேஸ்ட அதிகாரிகள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது நாட்டின் எண்ணெய் மற்றும் வங்கித்துறையில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெற்றோ வியட்னாம் கட்டுமான (PetroVietnam Construction) நிறுவனத்தின் தலைவர் திரிஷ் சூவான் தான் ( Trinh Xuan Thanh ) உட்பட 22 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் வியட்னாமில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.