குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐந்தாண்டு கால வரையறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதிக்காது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக போட்டியிடாத காரணத்தினாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறு சட்ட விளக்கம் கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அந்த சட்டம் அமுலாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தவே ஜனாதிபதி தீர்மானித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அண்மையில் 2021ம் ஆண்டில் பதவிக் காலம் பூர்த்தியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த சட்ட விளக்கம் கோரியே இவ்வாறு உச்ச நீதிமன்றிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதியை 19ம் திருத்தச் சட்டம் பாதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.