170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாக அரசாங்கம் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டணி அரசாங்கம் அரசியல் ரீதியான அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் பெருந்தொகை பணத்தை கடனாக செலுத்த நேரிட்டுள்ளதாகவும் இது பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love