குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹவாய் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதனை தொடர்ந்து அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. எனினும், இந்த தாக்குதல் எச்சரிக்கை போலியானது என்பது பின்னர் தெரியவந்துள்ளது. ஹவாய் தீவுகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக நேற்றைய தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறுஞ்செய்தி ஊடாக இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மாநில அரசாங்க அதிகாரியொருவர் பிழையான பொத்தானை அழுத்திய காரணத்தினால் இந்த குழப்ப நிலைiமை ஏற்பட்டதாக ஹவாய் மாநில ஆளுனர் டேவிட் இஜே ( David Ige ) தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விரிவான அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.
ஹவாய் தீவுகள் வடகொரியாவின் ஏவுகணை எல்லைகளுக்கு அருகாமையில் இருக்கின்ற காரணத்தினால் இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த எச்சரிக்கை போலியானது என பின்னர் அறிவிக்கப்டப்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.