148
அண்மைக்காலங்களில் இணையதளங்களை முடக்கப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை இணையத் திருடர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளன.
இந்நிலையில், ஐ.நா. அமைப்புக்கான இந்திய தூதரான சையத் அக்பருதீன் ருவிட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டது. அதனை சிறிது நேரத்திற்கு முடக்கி வைத்திருந்த இனம்தெரியாத நபர்கள் அதில் பாகிஸ்தான் கொடி மற்றும் அந்நாட்டின் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் படங்கள் பதிவு செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் இணையதளம் இயங்க தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே சைபர் போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த இணையத் திருடர்கள் பாகிஸ்தானின் சில இணையதளங்களையும், பாகிஸ்தானை சேர்ந்த இணையத் திருடர்கள் இந்தியாவின் சில இணையதளங்களையும் முடக்கி வருகின்றனர்.
Spread the love