போருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது இதனை வெளிக்கொண்டு வருகிறது CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பின் ஆவணப்படம்.
இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போருக்குப்பின்னர் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த செயற்பாட்டை வெளி உலகிற்கு எடுத்துச்செல்லும் வகையில் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பௌத்த மேலாண்மை Buddhist Dominance என்ற பெயரில் திருகோணமலையை தளமாக கொண்டு செயற்படும் CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு இந்த ஆவணப்படத்தினை தயாரித்து வெளியிட்டுள்ளது. தமிழிலும்,ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்,வரலாற்றுத்துறை பேராசிரியர் சத்தியசீலன்,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா,பௌத்த,இந்து,இஸ்லாம் மதங்களின் மதகுருமார்கள் என பலர் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
போருக்குப்பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தால் பௌத்த மதித்தின் பேரால் எவ்வாறு தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்பதை இந்த ஆவணப்படம் காட்டியிருக்கிறது.
This documentary discusses and calls for mutual dialogue on a current problem that is preventing reconciliation and peace among communities. The history need to be studied in depth. The fact of Tamil Buddhists lived in Sri Lanka need to be accepted and the common heritage of the country should be preserved. The current Buddhist Dominance as it presents now need to fade away.
இந்த ஆவணத் திரைப்படம் தற்சமயம் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் பிரச்சினையான பௌத்த சமயத்தின் மேலாண்மையை மையப்படுத்தி இனங்களுக்கிடையிலான மீள் இணக்கத்தினையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் சாத்தியக்கூறுகளை விவாதிக்கிறது. இலங்கையின் வரலாறு ஆழமாக கற்கப்படவேண்டிய ஒரு விடயம். இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் எமது நாட்டின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். தற்சமயம் நிலவும் பௌத்த மேலாண்மை நீக்கப்படவேண்டும்.