குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொசோவோவின் முக்கிய அரசியல்வாதியொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொசோவோ சேர்பிய அரசியல்வாதியான ஒலிவர் இவானோவிக் (Oliver Ivanovic) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கட்சி அலுவலகத்திற்கு எதிரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவானோவிக் மீது யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி தண்டனை விதிக்கப்பட்டிருந்ததுடன் மேன்முறையீட்டின் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 64 வயதான இவனோவிக் கொசோவோவின் மிக முக்கியமான ஓர் அரசியல்வாதி என தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் எகன்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.