157
செவணகல, கட்டுபிலகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவித்த காவல்துறையினர் துப்பாக்கிதாரி யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உடவளவ, வலவேகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் செவணகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். .
Spread the love