குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் 4000 பில்லியன் ரூபா பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். இந்த மோசடி தொடர்பான தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மோசடிகள் குறித்து விசாரணை நடாத்துவதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்க்பபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் மீது பிணை முறி மோசடிகள் குறித்து குற்றம் சுமத்தும் தரப்பினர் ஆட்சியில் இருந்த காலத்திலேயே இந்த 4000 பில்லியன் ரூபா பிணை முறி மோசடி இடம்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பிணை முறி மோசடி இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் ஊடாக 11 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மோசடியுடன் தொடர்புடைய நிறுவனத்தின் 12 பில்லியன் பணம் மத்திய வங்கியில் வைப்பில் உள்ளதாகவும் அதனை மீள அறவீடு செய்வதில் சிக்கல் இருக்காது எனவும் அ வர் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் 4000 பில்லியன் ரூபா பிணை முறி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.