உலகம் பல்சுவை பிரதான செய்திகள்

மெக்சிகோ கடற்கரையில் மாயன் காலத்து குகை ….

மெக்சிகோவின் கடற்கரையில் மாயன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான குகை ஒன்று நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு.2600-ம் ஆண்டுகளில் வாழ்ந்த கணிதம் மற்றும் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்றவர்களாக மாயன்கள் என நம்பப்படுகின்ற நிலையில் அவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் உலகின் மிக நீளமான குகையையே மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் நீருக்கடியில் கண்டுபிடித்துள்ளனர்.

மெக்சிகோவின் யுகாடா தீபகற்பத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தற்செயலாக இந்த அதிசய குகையை கண்டுபிடித்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும் நீருக்கடியில் உள்ள 216 மைல் நீளம் கொண்ட இந்த குகை புத்தம் புதியதாக இருப்பதாகவும், இதில் மர்மங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மெக்சிகோ நாட்டு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தால் இந்த குகை முழுவதையும் ஆராய்ச்சி செய்ய தயார் எனக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த குகையை ஆராய்ந்தால் மாயன் நாகரித்தின் பல மர்மங்கள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.