156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கி அரசாங்கம் சிரியாவின் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் நிலைகொண்டுள்ள வட சிரியாவில் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தவகையில் நேற்றைய தினம் இரவு 70 எறிகணைகள் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்ரீன் என்ற நகரின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது.
Spread the love