கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் தனக்கும் தனது குடும்பத்துக்கும் துப்பாக்கி உரிமம் கோரியுள்ளார்.
லாலு உள்ளிட்டோர் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், தியோகர் மாவட்ட கருவூலத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் லாலு உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23-ம் திகதி அறிவித்தது. இதில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இந்நிலையில் நீதிபதி சிவபால் சிங், அவரது மகன், மகள் ஆகிய மூவரும் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது