Home இலங்கைஉண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை…

உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை…

by admin


உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவர். இது இலங்கைக்கு சாதகமாக அமையாது.  மேலும் “எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எமது சார்பில் இந்தக் காரணிகளை நாம் உறுதியாக முன்வைக்க முடியும். எமது நீதிமன்றம் மீதான சுயாதீனத்தை சுட்டிக்காட்டி உறுதியான விவாதத்தை முன்னெடுக்க முடியும். அதனை அரசாங்கமாக நாம் முன்னெடுப்போம். நேரடியாக எமது காரணிகளை நாம் தெரிவிப்போம். அத்துடன் இன்று நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நல்லிணக்க செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே இவை அனைத்துமே எமக்கு சாதகமாக அமைந்துள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற போது கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More