சினிமா பிரதான செய்திகள்

அதர்வாவை தொடர்ந்து ஆகாஷ்– நடிகர் முரளியின் இரண்டாவது வாரிசு ஊடகங்களின் கண்களில் தெறித்தார்…

தமிழ் சினிமா நடிகர்கள் பலர் தமது குடும்பத்தை ஊடகங்களின் பார்வையில் படாமல் பாதுகாத்து வருகின்றனர். சினிமாக் கண்கொண்ட பார்வையால் தமது குடும்பம், வம்புகளிலோ, பிரச்னைகளிலோ, சிக்கி விடக் கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ரஜினி, விக்ரம் போன்றோ பலரை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவர்கள் தங்களது குடும்பத்தினரை மீடியா வெளிச்சத்தில் பல காலம் படமால் வைத்திருந்தனர். ரஜினி மகள்கள் ஐஷ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் வளர்ந்த பின்பே வெளியே தெரியத் தொடங்கினர்.

அப்படி தனது குடும்பத்தினரையும் ஊடக பார்வையில் படாமல் பார்த்துக் கொண்டவர் நடிகர் முரளி. அவரது மூத்த மகன் அதர்வா தற்போது சினிமாவில் நடிப்பதன் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷின் ஒளிப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. அதர்வா, ஆகாஷ் ஆகியோரோடு முரளியின் மனைவி ஷோபா இணைந்து எடுத்திருக்கும் இந்த ஒளிப்படமே ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது..

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.