குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்திற்கும் ஜே.வி.பிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அவரது செயலாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் தற்பொழுது ஜனாதிபதி செயலகத்தில் பணிப்பாளர் ஒருவராக செயற்பட்டு வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கூடுதல் சலுகைகள் பாராளுமன்றில் வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திடமிருந்து வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளும் ஜே.வி.பி கட்சி மறுபுறத்தில் பொய்யாக ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் விமர்சனம் செய்து மக்களை ஏமாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி கட்சி மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு செயற்படத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.