குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் விசேட உரைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அனுமதி மறுத்துள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் விசேட உரையாற்றுவதற்கு அனுமதியளிக்குமாறு ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.
எனினும் அவ்வாறு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இன்றைய தினம் ரவி கருணாநாயக்க தனது நிலைப்பாட்டை வெளியிடத் திட்டமிட்டிருந்தார். பாராளுமன்ற சிறப்புரிமையின் அடிப்படையில் பேசுவதற்கு அனுமதி வழங்குமாறு ரவி கருணாநாயக்க கோரியிருந்தார். எனினும், இந்தக் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.