186
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா, இமயமலையில் அமைந்துள்ள ஒரு எழில்மிகு நகரமாகும். பனிப்பொழிவுக் காலத்தில் சிம்லா நகரம் மேலும் அழகு பெறுகின்றது. தற்போது சிம்லாவில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளமை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் பருவத்தில் முதல் பனிப்பொழிவு தற்போது சிம்லாவில் தொடங்கியுள்ளது. பனிப்பொழிவு காரணமாக வெள்ளை போர்வையால் போர்த்தியது போல சிம்லா காட்சியளிக்கிறது. காணும் இடமெல்லாம் பனியால் போர்த்தப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதன் காரணமாக சிம்லாவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.சிம்லா மட்டுமல்லாமல், வைஷ்னோ தேவி ஆலயம், நைனிதால், காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
பனிப்பொழிவு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைகால தலைநகரமாகவும் சிம்லா செயல்பட் டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love