சீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை அச்சுறுத்தலாக நோக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனாடன் வர்த்தக யுத்தத்தில் ஈடுபடவில்லை எனவும், சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஆயத்தங்களை செய்து வருவதாகவும் அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்புர் ரோஸ் தெரிவித்துள்ளார். சீனா, தென் கொரிய நாடுகளின் தொழில்நுட்ப உற்பத்திகளை இறக்குமதி செய்வது தொடர்பில் அண்மையில் அமெரிக்கா புதிய கெடுபிடிகளை அறிவித்திருந்தது.
சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ட்ராம்ப் அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையிலேயே, சீனாவுடன் வர்த்தக யுத்தத்தில் ஈடுபடவில்லை எனவும், தொழில்நுட்ப ரீதியில் சீனாவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரோஸ் தெரிவித்துள்ளார்.