குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முழு அளவில் உறுதி செய்யப்படாத நிலையில் கோதபாய ராஜபக்சவோ அல்லவேறு வேறும் ஒருவரையோ கைது செய்யக் கூடாது என ஜனாதிபதி பிரதமரிடம் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னதாக கோதபாய கைது தொடர்பில், காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்த போது இதே விடயத்தை தாம், கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் ஊடகப் பிரதானிகள் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம் செய்திருந்த போது, கோதபாய கைது குறித்து காவல்துறை மா அதிபர் தொலைபேசி ஊடாக தமக்கு அறிவித்தார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சியாளர்களை கைது செய்வதற்கு முன்னதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்