பெப்ரவரி முதலாம் திகதியிலருந்து இரண்டு மாத காலத்திற்கு மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தப் போவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
மதவாச்சி மற்றும் தலைமன்னார் வரையான புகையிரத மார்க்கத்தில் இருக்கின்ற பாலத்தின் புனர்நிர்மாணப் பணி காரணமாக இவ்வாறு புகையிரத போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாத்தறை – கதிர்காமம் இடையிலான புகையிரத பாதையின் பெலியத்தை வரையான பகுதி இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும் எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது
278.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவில் சீனாவின் நிதியுதவியுடன்இந்த புகையிரதபாதை நிர்மாணிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.