இந்தியா கம்போடியா இடையே நீர் ஆதாரத் திட்டம் உட்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியா சென்றுள்ள கம்போடிய பிரதமர் சாம்டெக் {ஹன் சென் டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்து இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும், கம்போடிய பிரதமர்; சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து இந்தியா, கம்போடியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. கம்போடியாவிலுள்ள ஸ்டங் ஸ்வா ஹப் நீர் ஆதாரத் திட்டத்துக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை அழிக்க இந்தியா, கம்போடியா இணைந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளனர்.