எனது பதவி பறிபோனாலும் எனக்கு கவலையில்லை, நான் எண்ணெய் மாபியாவை ஒழிக்கத் தயாராக உள்ளேன் என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் உள்ள விமானங்களுக்கான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பல எரிபொருள் விநியோக நிலையங்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இங்கும் அங்கும் மாறி மாறி தாவும் அமைச்சர்கள் மூடிப்பட்ட எரிபொருள் நிலையங்களை திறக்கமாட்டீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால் எனக்கு எந்த அழுத்தங்கள் வந்தாலும் நான் எரிபொருள் மாபியாவை ஒழித்தே தீருவேன், குறிப்பாக டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதை நிறுத்தியே தீருவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு இதுதொடர்பாக ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் அழுத்தம் கொடுத்ததில்லை எனவும் நான் விளையாடும் காலத்தில் தான் ஹெல்மட் மாட்டினேன். ஆனால் அரசியலுக்கு வந்த பின் ஹெல்மட் மாட்டுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.